Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  31-12-2020

இன்றைய தியானம்(Tamil)  31-12-2020

முறுமுறுப்பு வேண்டாம் 

“அவர்களில் சிலர் முறுமுறுத்(தார்கள்).... அதுபோல... முறுமுறுக்காதிருங்கள்.” – 1கொரிந்தியர் 10:10

கடந்து வந்த 2020ம் ஆண்டை சற்று திரும்பி பார்ப்போம். பருவநிலை மாறுவதைப் போல எத்தனை எத்தனை மாற்றங்கள்! படிப்பில், கற்பிக்கும் முறையில், குடும்ப பொருளாதாரத்தில், ஊழியத்தில், வேலையில், வியாபாரத்தில், வாழ்க்கைமுறையில் என விதவிதமான திருப்பங்களால் நிறைந்திருந்தன அல்லவா? உயிர்வாழ அத்தியாவசியமான தண்ணீர், உணவு, காற்று வரிசையில் மாஸ்க்-கையும் சேர்த்துக்கொள்ளும் கட்டாயம்! அப்பப்பா – திருமணம், உறவினர் வீடு, பள்ளி, கல்லூரிக்குப் போகாமல் ஒரு வருடத்தையும் முடித்துவிட்டோம். 

அப்படியென்றால் மகிழ்ச்சியான காரியங்களும், நினைத்தவைகளெல்லாம் நிறைவேறின காலங்களும் கர்த்தரிடத்திலிருந்து வந்தவையென்றும் நாம் விரும்பாத இந்த கால கட்டங்கள் பிசாசின் வேலை என்றும் நாம் சொல்லிவிட முடியாது. தேவனாலன்றி அணுவும் அசையாது என்பதை நாம் அறிந்திருப்போம். ஆகவே விதவிதமான சூழ்நிலைகள் மூலமாக தேவன் தமது பிள்ளைகளை நடத்துகிறார். ஒருவேளை நாம் நினைக்கலாம், “இந்த கொரோனா தொற்று வராமல் இருந்திருந்தால் இவ்வருடம் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும். என் பிள்ளையின் திருமணம் சிறப்பாய் நடந்திருக்கும். என் மகன் 10th  exam எழுதி நல்ல மதிப்பெண்களை பெற்றிருப்பான்” என்று. எல்லாம் சரிதான். ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நம் நினைவுகள் தேவனுடைய நினைவுகள் அல்ல. ஆகவே இன்பமோ – துன்பமோ எதுவானாலும் தேவன் நம்மை நடத்தும் பாதையில் பொறுமையோடு நடப்போம். எந்த சூழ்நிலையிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்வோம். 

பிரியமானவர்களே! அன்று இஸ்ரவேல் ஜனங்கள் தேவனையும் அவரது அன்பையும் புரிந்து கொள்ளாமல் தொட்டதற்கெல்லாம் முறுமுறுத்து ஆண்டவரது மனதை புண்படுத்தினர். இன்று நாம் எப்படியிருக்கிறோம்? தேவன் நம்மை நடத்தும் பாதையெல்லாம் நன்மையானதே என உணர்ந்து பொறுமையோடு இருக்கிறோமா? அல்லது இந்த வருடம் முடிந்துவிட்டதே, படிப்பு இப்படி கெட்டுப்போய் விட்டதே, நல்லது கெட்டதற்கு போகமுடியவில்லையே என்று முறுமுறுத்துக்கொண்டே இருக்கிறோமா? நீங்கள் நினைப்பதுபோல் இவ்வாண்டு சற்று கடினமாக இருந்தாலும் இன்னும் உயிரோடுதானே இருக்கிறோம். இன்றுவரை உண்ண உணவையும், உடுத்த உடையையும், உறங்க இடத்தையும் தந்தாரே! முன்பைவிட அதிகமாய் வேதத்தை வாசித்திருக்கிறோம். பிற நாடுகளுக்காய் ஜெபித்திருக்கிறோமே! ஆகவே நாம் ஒருபோதும் தேவனை முறுமுறுக்கவேண்டாம். முறுமுறுக்கத் தூண்டும் பிசாசின் சிந்தனைகளை துரத்திவிடுவோம். வரப்போகும் புதிய ஆண்டிலே கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆண்டவரை துதித்துக் கொண்டேயிருப்போம். 
-    Mrs. ஜெபா டேவிட்கணேசன் 

ஜெபக்குறிப்பு:
தேவன் இவ்வூழியத்தைக் கொண்டு செய்ய நினைத்த காரியங்களை செய்து முடிக்க தகுதியுள்ளவர்களாக ஊழியர்கள் காணப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)